New Updates! Fresh news just arrived.

22 வது திருத்தம் டித்வாவை போன்றதொரு பேரழிவு: எதிர்க்கட்சி...

News

22 வது திருத்தம் டித்வாவை போன்றதொரு பேரழிவு: எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச!

September 17, 2026 2:37 pm
22 வது திருத்தம் டித்வாவை போன்றதொரு பேரழிவு: எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச!
டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த 100 குடும்பங்களுக்கு வீடுகளை மெற்றுக் கொடுக்கும் நோக்கத்துடன் வத்தளையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

டித்வாவைப் போன்றே மற்றொரு பாரதூரமான பேரழிவே ஜனநாயகத்தை சுருக்கும் நடவடிக்கையுமாகும்.

22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் ஊடாக ஜனநாயகத்திற்கு மரண அடி கொடுக்க அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது.

ஜனநாயகத்தை ஸ்தாபிக்கும் பிரதான தூண்களான சட்டவாக்கதுறை, நிறைவேற்றுத்துறை மற்றும் நீதித்துறை ஆகிய மூன்று தூண்களையும் வலுவிழக்கச் செய்து, நீதித்துறையை பலவீனப்படுத்தி, நிறைவேற்றுத்துறையை பலப்படுத்தி, நீதித்துறையை நிறைவேற்றுத்துறையின் அடிமையாக்கும் பெரும் சதித்திட்டமே 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தமாகும்.

இது ஜனநாயகத்தை சுருக்கும், ஜனநாயகத்திற்கான வெளியை இல்லாது செய்யும், நாட்டில் தனக்கட்சு ஆட்சி முறையை உருவாக்கும் ஜனநாயகத்தின் மீதான மரண அடியாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

நாட்டில் சர்வாதிகார ஆட்சியை ஸ்தாபிக்க முற்படும் இந்த முயற்சியை தோற்கடிக்க வேண்டும்.

இல்லாவிட்டால் சுதந்திரமாக அரசியல் செய்யவோ, கருத்துக்களை தெரிவிக்கவோ முடியாத நிலை ஏற்படும். தனிநபர் சுதந்திரம் மிகவும் முக்கியமானதாகும்.

220 இலட்சம் மக்களின் அரசியல் மற்றும் சமூக சுதந்திரம் இதன் மூலம் உறுதியாகின்றன. அவ்வாறே, அதிகாரங்களுக்கு இடையிலான தடைகள் மற்றும் சமன்பாடுகளை பாதுகாக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now