New Updates! Fresh news just arrived.

22ஆவது திருத்தம்: மக்கள் தோல்வியடைந்துள்ளனர் - சஜித் - Gu...

News

22ஆவது திருத்தம்: மக்கள் தோல்வியடைந்துள்ளனர் - சஜித்

September 26, 2026 12:41 pm
22ஆவது திருத்தம்: மக்கள் தோல்வியடைந்துள்ளனர் - சஜித்
22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இதன் மூலம் நாட்டின் மக்களின் ஜனநாயக உரிமைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நேற்று (25) பாராளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்புக்குப் பின்னர் கருத்து வெளியிட்ட அவர், இந்தத் திருத்தம் ஜனநாயகத்தை சுருக்கும் நடவடிக்கைகளுக்கு வழிவகுப்பதாக விமர்சித்தார்.

மேலும், தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்களை ஒன்றிணைக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக ஐக்கிய மக்கள் சக்தி தொடர்ந்து செயற்படும் என்றும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now