New Updates! Fresh news just arrived.

22வது அரசியலமைப்புத் திருத்தம்: எழுத்துமூல சமர்ப்பணங்களுக...

News

22வது அரசியலமைப்புத் திருத்தம்: எழுத்துமூல சமர்ப்பணங்களுக்கு இன்று காலக்கெடு!

September 3, 2026 8:40 am
22வது அரசியலமைப்புத் திருத்தம்: எழுத்துமூல சமர்ப்பணங்களுக்கு இன்று காலக்கெடு!
அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் தொடர்பான எழுத்துமூல சமர்ப்பணங்களை இன்று (03) சமர்ப்பிக்க முடியும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

பிரதம நீதியரசர் தலைமையில் அமைந்த ஐவர் கொண்ட நீதியரசர்கள் குழாம், குறித்த ஆவணங்களை இன்று பிற்பகல் 3.00 மணிக்கு முன்னதாக தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளது.

இந்த சட்டமூலத்திற்கு எதிராக முன்வைக்கப்பட்ட மனுக்கள் மீதான நீதிமன்ற விசாரணை நேற்று (02) நிறைவடைந்தது. விசாரணையை முடித்த நீதியரசர்கள் குழாம், மனுதாரர்கள் தரப்பில் மேலதிக எழுத்துமூல விளக்கங்கள் அல்லது சமர்ப்பணங்கள் இருப்பின் அவற்றை இன்று சமர்ப்பிக்குமாறு தெரிவித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து, 22வது திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்புக்கு அமைவானதா என்பது தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கும் வியாக்கியானம் பாராளுமன்ற சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்படும் என ஐவர் கொண்ட நீதியரசர்கள் குழாம் தெரிவித்துள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now