22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் இன்று பாராளுமன்றத்தில் மு...
News
22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் இன்று பாராளுமன்றத்தில் முன்வைப்பு!
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது தொடர்பான மாற்றங்களை உள்ளடக்கிய 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் இன்று (18) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சட்டமூலம் ஏற்கனவே நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் இடம்பெற்றுள்ளதுடன், இதனை நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார சபையில் முன்வைக்கவுள்ளார்.
இந்தத் திருத்தத்தின் ஊடாக 1978ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க நீதித்துறை ஒழுங்கமைப்புச் சட்டத்தில் சில மாற்றங்களை மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்துவதற்கான அரசாங்கத்தின் இந்த முயற்சிக்கு ஆரம்பத்திலிருந்தே பல்வேறு தரப்பினரிடமிருந்து எதிர்ப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. மகாநாயக்க தேரர்கள், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், எதிர்க்கட்சிகள் மற்றும் சில சர்வதேச அமைப்புகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தன.
இவ்வாறான எதிர்ப்புகளுக்கு மத்தியில், நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிப்பதற்கான சட்டமூலம் கடந்த 7ஆம் திகதி அரசாங்கத்தினால் வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.
நாடாளுமன்றத்தில் சட்டமூலம் ஒன்று முன்வைக்கப்பட்ட பின்னர், அதனை உயர் நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்த அரசியலமைப்பின் கீழ் 14 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படுகிறது.
அவ்வாறு தாக்கல் செய்யப்படும் மனுக்களை பரிசீலித்த பின்னர், 3 முதல் 21 நாட்களுக்குள் தனது தீர்மானத்தை உயர் நீதிமன்றம் நாடாளுமன்றத்திற்கு அறிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.