போதைப்பொருட்களுடன் 23 வயது இளைஞர் கைது!
News
போதைப்பொருட்களுடன் 23 வயது இளைஞர் கைது!
அஹுங்கல்ல, எலதொட்ட சந்தைப் பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட வாகனச் சோதனையின்போது பல்வேறு வகையான போதைப்பொருட்களுடன் 23 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி அஹுங்கல்ல பொலிஸ் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின் போதே இந்த போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது, சந்தேகநபரிடமிருந்து 1 கிலோகிராம் 194 கிராம் ஐஸ் போதைப்பொருள், 217 கிராம் ஹெரோயின் மற்றும் 101 கிராம் 270 மில்லிகிராம் குஷ் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும், சந்தேகநபர் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் பொலிஸாரின் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர் வத்துகெதர பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அஹுங்கல்ல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.