கொழும்பின் பல பகுதிகளில் 24 மணி நேர நீர்விநியோகம் இடைநிறு...
News
கொழும்பின் பல பகுதிகளில் 24 மணி நேர நீர்விநியோகம் இடைநிறுத்தம்!
கொழும்பு மற்றும் அதனை அண்மித்த சில பகுதிகளில் இன்று இரவு முதல் ஒரு நாள் முழுவதும் குடிநீர் விநியோகம் பாதிக்கப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய பராமரிப்பு நடவடிக்கைகளே இதற்குக் காரணமாகும். இதன்படி, இன்று (03) இரவு 8.00 மணிக்கு ஆரம்பமாகும் நீர்வெட்டு, நாளை (04) இரவு 8.00 மணி வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீர் விநியோகப் பணிகள் பாதிக்கப்படவுள்ள பகுதிகளின் பட்டியலில் நுகேகொடை, கொஹுவலை, தெஹிவளை, கல்கிசை, ரத்மலானை மற்றும் மொறட்டுவை ஆகிய பகுதிகள் அடங்குகின்றன. இதனுடன் ராவதாவத்தை, சொய்சாபுரம், அங்குலானை, இதிபெத்த, கடுபெத்த, கல்தெமுல்ல, மோதறை, கொரளவெல்ல, எகொடவுயன மற்றும் கட்டுக்குருந்தை பகுதிகளும் பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, செத்சிறிபாய முதல் சாந்தி மாவத்தை வரையிலான சில பகுதிகளிலும் இந்த காலப்பகுதியில் நீரைப் பெற்றுக்கொள்ள முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில் ஹிம்புடான, உடுமுல்ல வீதி, மாளிகாகொடெல்ல, வங்கிச் சந்தி வீதி, டபிள்யூ.ஏ. சில்வா மாவத்தை, ஹவ்லொக் வீதி, கல்யாணி வீதி, கொழும்பு 06, வைத்தியசாலை வீதி மற்றும் ஜெயந்தி மாவத்தை ஆகிய இடங்களும் உள்ளடங்குகின்றன.
பராமரிப்புப் பணிகள் காரணமாக ஏற்படும் இந்த இடையூறுக்கு வருத்தம் தெரிவித்துள்ள அதிகாரிகள், நீர்வெட்டு அமுலில் இருக்கும் காலத்தில் பொதுமக்கள் நீரை தேவைக்கேற்ப சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளனர்.