New Updates! Fresh news just arrived.

24½ பவுண் தங்க நகைகள் திருட்டு: சந்தேகத்தின் பேரில் கல்வ...

News

24½ பவுண் தங்க நகைகள் திருட்டு: சந்தேகத்தின் பேரில் கல்வி கற்றுவந்த யுவதி கைது!

August 4, 2026 3:21 pm
24½ பவுண் தங்க நகைகள் திருட்டு:  சந்தேகத்தின் பேரில் கல்வி கற்றுவந்த யுவதி கைது!
மட்டக்களப்பு மாவட்டம், களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துறைநீலாவணை கிராமத்திலுள்ள வீடொன்றில் இருந்து தாலிக்கொடி, கைவளையல்கள், தோடுகள், கைச்சங்கிலி உள்ளிட்ட 24 அரை பவுண் தங்க நகைகளானது திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்படி, கடந்த ஞாயிற்றுக்கிழமை (02) குறித்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதோடு, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் உடனடியாக களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை பதிவு செய்திருந்தனர்.

முறைப்பாட்டினையடுத்து தீவிர விசாரணைகளினை முன்னெடுத்த களுவாஞ்சிகுடி பொலிஸார், திங்கட்கிழமை (03) திருடப்பட்ட குறித்த தங்க ஆபரணங்கள் அனைத்தினையும் மீட்டுள்ளதோடு, சந்தேகத்தின் பேரில் குறித்த யுவதியினையும் கைது செய்துள்ளனர்.

வெளிமாவட்டத்தினை சேர்ந்த குறித்த யுவதி, பாதிக்கப்பட்ட வீட்டின் உரிமையாளரின் வீட்டில் தங்கியிருந்து கல்வி கற்று வந்த நிலையில் குறித்த திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

மேலும், கைப்பற்றப்பட்ட 24½ பவுண் தங்க நகைகளுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபரினையும், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

பாறுக் ஷிஹான்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now