எரிபொருள் நிறுவனங்கள் எவ்வாறு செயற்பட வேண்டும்: அமைச்சரின...
எரிபொருள் நிறுவனங்கள் எவ்வாறு செயற்பட வேண்டும்: அமைச்சரின் அறிவிப்பு!
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், லங்கா இந்தியன் எண்ணெய்க் கூட்டுத்தாபனம் மற்றும் சினோபெக் எனர்ஜி லங்கா ஆகிய நிறுவனங்களுக்கு அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் குறைந்தபட்சம் 50% எரிபொருள் இருப்புக்களை பராமரிக்குமாறு பணிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பண்டிகைக் காலங்களில் தட்டுப்பாடு ஏற்படுவதை தவிர்க்கும் நோக்கில் அமைச்சர் காஞ்சன விஜேசேகரவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி துறை இராஜாங்க அமைச்சர் டி.வீ. சானக தெரிவித்தார்.
இதேவேளை, பண்டிகைக் காலத்தில் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் எரிபொருள் விநியோகம் தடையின்றி நடைபெறும் எனவும் எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் உறுதியளித்துள்ளது.
மேலும், வெள்ளிக்கிழமை (22) அமைச்சர் விஜேசேகர, வார இறுதி நாட்களிலும் விடுமுறைக் காலங்களிலும் அத்தியாவசியமற்ற பராமரிப்புப் பணிகளுக்காக திட்டமிடப்பட்ட அனைத்து மின்சாரத் தடைகளையும் இடைநிறுத்துமாறு இலங்கை மின்சார சபைக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.