மக்கொனை அஹதிய்யா அறநெறிப் பாடசாலையின் 25ஆவது ஆண்டு நிறைவு...
News
மக்கொனை அஹதிய்யா அறநெறிப் பாடசாலையின் 25ஆவது ஆண்டு நிறைவு விழா!
வரலாறு படைக்கும் மக்கொனை அஹதிய்யா அறநெறிப் பாடசாலையின் 25ஆவது ஆண்டு நிறைவான ‘வெள்ளிவிழாவை” உத்தியோகபூர்வமாக 2026-06-28 ஆந் திகித ஞாயிற்றுக் கிழமை பி.ப. 2.00 மணி முதல் மாலை 6.30 வரை மக்கொனை அல்ஹஸனியா மஹா வித்தியாலய பிரதான மண்டபத்தில் இடம்பெற ஏற்பாடாகியுள்ளது.
வெள்ளி விழாவின் போது தற்போது கடமையாற்றுகின்ற 25 ஆசிரியர்கள், மற்றம் 2024-2025ஆம் ஆண்டுகளில் கடமையாற்றிய மேலும் 10 ஆசிரியர்களுக்கு விசேட விருதுகள், 15 அபிவிருத்திச் சங்க உறுப்பினர்களுக்கான விசேட விருதுகள், மற்றும் போட்டிகளில் வெற்றியீட்டிய 19 மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கப்படவுள்ளன. நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக 25ஆம் ஆண்டு வெள்ளிவிழா நினைவு மலர் "ரிஹ்லத் அன் நூர் " வெளியிட்டு வைக்கப்படவுள்ளன.
பேருவளை ஜாமியா நளீமியாக் கலாபீட முதல்வர் அஷ்-ஷேக் ஏ.சீ. அகார் முஹம்மட் பிரதம அதிதியாகவும், அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையின் செயலாளர் அஷ்ஷேக் அர்கம் நூராமித், ஹாசிம் உமர் பவுண்டேசனின் தலைவர் புரவலர் ஹாசிம் உமர் ஆகியோர் கெளரவ அதிதிகளாகவும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். விசேட அதிதிகளாக பிதமமந்திரியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் ரிப்லான் ஹஸன், களுத்துறை வலயக் கல்விப் பணிப்பாளர், அஹதிய்யா மத்திய சம்மேளனத் தலைவர், உதவித் தலைவர், உதவிச் செயலாளர், பொருளாளர், களுத்துறை மாவட்ட அஹதிய்யா சம்மேளனத் தலைவர் , செயலாளர் மற்றும் பலர் கலந்து சிறப்பிக்கவுளள்ளனர்.
நிகழ்வினை அஹதிய்யா அதிபர் அல்ஹாஜ் ஜ.எம்.எம் உவைஸ் தலைமை தாங்குகிறார்.
தகவல் ஜிப்ரியா இப்றாஹிம்,
செயலாளர் மக்கொனை அஹதிய்யா பாடசலை.