வெல்லம்பிட்டியில் சட்டவிரோத இலத்திரனியல் சிகரெட்டுகளுடன் ...
News
வெல்லம்பிட்டியில் சட்டவிரோத இலத்திரனியல் சிகரெட்டுகளுடன் 26 வயது நபர் கைது!
வெல்லம்பிட்டி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின்போது, சட்டவிரோதமாக விற்பனை செய்யத் தயாராக வைத்திருந்த வெளிநாட்டு இலத்திரனியல் சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை கடற்படையினரும் மிரிஹான மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் இணைந்து கடந்த 01ஆம் திகதி இந்த சோதனை நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது சந்தேகத்திற்கிடமான முறையில் காணப்பட்ட கார் ஒன்றை அதிகாரிகள் சோதனையிட்டுள்ளனர். சோதனையின் போது 130 சட்டவிரோத இலத்திரனியல் சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதுடன், அவற்றைக் கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் காரும் கைப்பற்றப்பட்டுள்ளது.
சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் வெல்லம்பிட்டி பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர், கார் மற்றும் கைப்பற்றப்பட்ட இலத்திரனியல் சிகரெட்டுகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வெல்லம்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.