New Updates! Fresh news just arrived.

இலங்கை காவலில் 27 தமிழக மீனவர்கள்

News

இலங்கை காவலில் 27 தமிழக மீனவர்கள்

August 7, 2026 5:39 pm
இலங்கை காவலில் 27 தமிழக மீனவர்கள்
தமிழகத்தைச் சேர்ந்த 27 மீனவர்கள் தற்போது இலங்கை அதிகாரிகளின் காவலில் இருப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

2026 ஜூலை மாத இறுதி நிலவரம் தொடர்பாக இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்தபோதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

இதனுடன், தமிழக மீனவர்களுக்கு சொந்தமான 249 மீன்பிடிப் படகுகளும் இலங்கை பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் நலன் தொடர்பான விடயங்களுக்கு அரசாங்கம் முக்கியத்துவம் அளித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட மீனவர்களையும் தடுத்து வைக்கப்பட்டுள்ள அவர்களது படகுகளையும் விரைவில் விடுவித்து இந்தியாவிற்கு கொண்டு வருவது உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக இலங்கை அரசாங்கத்துடன் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

இவ்விடயத்தில் இரு நாடுகளுக்கிடையிலான அதிகாரபூர்வ கலந்துரையாடல்கள், தூதரக மட்டத்திலான தொடர்புகள் மற்றும் உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

2021ஆம் ஆண்டு முதல் இதுவரையான காலப்பகுதியில் இலங்கை கடற்படையினரால் 1,554 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், கைது நடவடிக்கைகளின் போது சுமார் 10 மீனவர்கள் பாதுகாப்புப் படையினரின் தாக்குதலுக்கு ஆளானதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now