வட இலங்கை சங்கீத சபை நடாத்திய 27வது கலா வித்தகர் பட்டமளிப...
News
வட இலங்கை சங்கீத சபை நடாத்திய 27வது கலா வித்தகர் பட்டமளிப்பு விழா!
வட இலங்கை சங்கீத சபை நடாத்திய 27வது கலா வித்தகர் பட்டமளிப்பு விழாவானது நேற்றையதினம் மருதனார்மடத்தில் உள்ள வட இலங்கை சங்கீத சபை மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது மங்கல விளக்கேற்றி வைக்கப்பட்டு, இறை வணக்கம் இசைக்கப்பட்டு நிகழ்வானது ஆரம்பமானது.
அதனைத் தொடர்ந்து கலைஞர்கள் கௌரவிப்பு இடம்பெற்றது. பின்னர் கலா வித்தகர்களுக்கு பட்டமளிப்பு இடம்பெற்றது.
வட இலங்கை சங்கீத சபையின் வலயக் கல்விப் பணிப்பாளர் மாலதி முகுந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் பற்றிக் டிறஞ்சன் பிரதம அதிதியாகவும், வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் யோ.ஜெயச்சந்திரன் சிறப்பு விருந்தினராகவும் கலந்து சிறப்பித்துடன், கௌரவ விருந்தினர்கள், கலைஞர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
பு.கஜிந்தன்