New Updates! Fresh news just arrived.

ஹமீத் அல் ஹுசைனி கல்லூரியின் பழைய மாணவர்களின் 2K2 ஜேர்ஸி ...

News

ஹமீத் அல் ஹுசைனி கல்லூரியின் பழைய மாணவர்களின் 2K2 ஜேர்ஸி அறிமுக நிகழ்வு!

September 24, 2026 6:56 pm
ஹமீத் அல் ஹுசைனி கல்லூரியின் பழைய மாணவர்களின் 2K2 ஜேர்ஸி அறிமுக நிகழ்வு!
கொழும்பு ஹமீத் அல் ஹுசைனி கல்லூரியின் பழைய மாணவர்களான Batch 2K2 ஏற்பாடு செய்துள்ள “Old Hameedians Batch 2K2 FUTSAL Season – 5” போட்டித் தொடரை முன்னிட்டு, உத்தியோகபூர்வ நினைவுச் சின்னம் வழங்கும் மற்றும் ஜேர்ஸி அறிமுகம் செய்யும் நிகழ்வு கொழும்பு கிராண்ட் பாஸ் கிங்ஸ் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

Batch 2K2 தலைவர் பாஹிம் புஹாரி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஹமீத் அல் ஹுசைனி கல்லூரியின் அதிபர் திருமதி என். சானியா டெயின் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றினார். இதனைத் தொடர்ந்து, ஹமீத் அல் ஹுசைனி கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் பொதுச் செயலாளர் இம்தியாஸ் இல்யாஸ் உரையாற்றினார்.

நிகழ்வின் பிரதான அனுசரணையாளரான ஹாஜரா ட்ரவல்ஸ் நிறுவனத்துக்கு ஏற்பாட்டாளர்களால் நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது. அதனை மௌலவி பர்ஹான் பெற்றுக்கொண்டார். ஹாஜரா ட்ரவல்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் செய்யது அலவி ஸாலிஹ் மௌலானா அவர்களுக்கு இதன்போது விசேட நன்றி தெரிவிக்கப்பட்டது.

அத்துடன், Gold Sponsor Kings Colombo நிறுவனத்துக்கும் போட்டித் தொடரின் வெற்றிக்கு வழங்கிய ஆதரவுக்காக நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது. அதனை முஹம்மட் கலீல் பெற்றுக்கொண்டார்.

நூருல் ஹுதா உமர், அக்ரம் லுதுபி
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now