CNN உள்ளிட்ட 3 ஊடகங்களுக்கு வெள்ளை மாளிகை நுழைவில் தடை! -...
News
CNN உள்ளிட்ட 3 ஊடகங்களுக்கு வெள்ளை மாளிகை நுழைவில் தடை!
CNN, MS NOW மற்றும் Politico ஆகிய மூன்று முன்னணி அமெரிக்க ஊடக நிறுவனங்களின் செய்தியாளர்களுக்கு வெள்ளை மாளிகைக்குள் நுழைவதற்கு தடை விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இந்த ஊடகங்கள் தனது நிர்வாகம் தொடர்பில் பொய்யான தகவல்களையும் புனைவுகளையும் வெளியிட்டு வருவதாக ட்ரம்ப் தனது ‘Truth Social’ பதிவில் குற்றம்சாட்டியுள்ளார். எனினும், அதற்கான குறிப்பிட்ட ஆதாரங்கள் எதையும் அவர் வெளியிடவில்லை.
தடை எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படும் என்பது தொடர்பிலும் இதுவரை தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை. இதனிடையே, இந்த நடவடிக்கைக்கு CNN எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன், இது ஊடக சுதந்திரத்திற்கு எதிரான சட்டவிரோத நடவடிக்கை எனக் குறிப்பிட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படலாம் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.