New Updates! Fresh news just arrived.

போதைப்பொருட்கள் மற்றும் சட்டவிரோத சாராயத்துடன் 3 சந்தேக ந...

News

போதைப்பொருட்கள் மற்றும் சட்டவிரோத சாராயத்துடன் 3 சந்தேக நபர்கள் கைது: பெண் சந்தேக நபரிடம் விசாரணைகள் முன்னெடுப்பு!

May 20, 2026 3:40 pm
போதைப்பொருட்கள் மற்றும் சட்டவிரோத சாராயத்துடன் 3 சந்தேக நபர்கள் கைது:  பெண் சந்தேக நபரிடம் விசாரணைகள் முன்னெடுப்பு!
அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை புறநகர் பகுதியான வீரமுனை 03 பகுதியில் நேற்று (19) மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது தம்வசம் வைத்திருந்த 33 ஆயிரம் மில்லி லீற்றர் கசிப்புடன் 40 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் சம்மாந்துறை ஊழல் ஒழிப்பு பிரிவின் பொறுப்பதிகாரியான என். ரிபாய்டீன் தலைமையிலான குழு குறித்த வீட்டில் இருந்து 22 போத்தல்களில் சூட்சுமமான் முறையில் அடைத்து வைக்கப்பட்டு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த கசிப்பினை மீட்டுள்ளனர்.

அத்தோடு, 25 வயது மதிக்கத்தக்க மலையடி கிராமம் பகுதியைச் சேர்ந்த சந்தேக நபரிடம் 10 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த நிலையில் கைதாகியுள்ளதோடு, குற்றச்சாட்டுடன் தொடர்புபட்ட இச்சந்தேக நபர் தொடர்பிலும் மேலதிக விசாரணைகளினை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இது தவிர கேரளா கஞ்சாவினை உடமையில் வைத்திருந்த மருதமுனை பகுதியினைச் சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க சந்தேக நபர் ஒருவரும் கைதாகியுள்ள நிலையில் குறித்த சந்தேக நபர் தொடர்பில் மேலதிக விசாரணைகளுக்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இதன்படி, மேற்குறிப்பிட்ட 3 சந்தேக நபர்களுக்கும் எதிராக சட்ட நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பாறுக் ஷிஹான்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now