New Updates! Fresh news just arrived.

அமெரிக்காவுக்கு உளவு பார்த்த 30 பேர் ஈரானில் கைது!

News

அமெரிக்காவுக்கு உளவு பார்த்த 30 பேர் ஈரானில் கைது!

March 10, 2026 9:47 pm
அமெரிக்காவுக்கு உளவு பார்த்த 30 பேர் ஈரானில் கைது!
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்காக உளவு பார்த்தமை, அவற்றுடன் இணைந்து செயற்பட்டமை மற்றும் தற்கொலைப்படை முகவர்களாகச் செயற்பட்டமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் கடந்த சில நாட்களில் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஈரானின் புலனாய்வு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தஸ்நிம் (Tasnim) செய்தி நிறுவனத்தை மேற்போள் காட்டி அல்ஜெஸீரா இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் வெளிநாட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் ஈரானின் பாதுகாப்பு தொடர்பான முக்கிய தகவல்களை இரண்டு "வளைகுடா நாடுகளின் அரசாங்கங்களுக்கு" வழங்கியதாகவும், பின்னர் அந்த நாடுகள் அத்தகவல்களை அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு வழங்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now