New Updates! Fresh news just arrived.

தேவையற்ற 31 அரசாங்க நிறுவனங்களை எதிர்காலத்தில் மூடப்பட வே...

News

தேவையற்ற 31 அரசாங்க நிறுவனங்களை எதிர்காலத்தில் மூடப்பட வேண்டும்: ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க!

May 22, 2026 5:21 pm
தேவையற்ற 31 அரசாங்க நிறுவனங்களை எதிர்காலத்தில் மூடப்பட வேண்டும்: ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க!
நஷ்டத்தை ஏற்படுத்தி வருகின்ற 31 தேவையற்ற அரசாங்க நிறுவனங்களினை எதிர்காலத்தில் மூடப்பட வேண்டும் என்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, அம்பாறையில் புதிய நகர சபைக்கான அடிக்கல் நாட்தற்கு வருகை தந்திருந்த ஜனாதிபதி, அங்கு கூடியிருந்த மகா சங்கத்தினார் மற்றும் பிற மதத் தலைவர்களை வாழ்த்தியதின் பின் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகரவினால் நகர சபைக்காகத் தயாரிக்கப்பட்ட பெயர் பலகையினை திறந்து வைத்ததன் பின்னர், அங்கு வருகை தந்த விருந்தினர்களினால் அடிக்கல் நாட்டப்பட்டது.

மேலும் தனது கருத்துக்களை தெரிவித்த ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, "இத்தகைய கட்டுமானங்களினை தொடங்கப்படவுள்ளன, ஆனால் இவை விரைவாக முடிக்கப்பட வேண்டும்" என்றும் குறிப்பிட்டார்.

"இன்று நமக்கு ரூபாவில் பிரச்சினை இல்லை, இருந்தபோதிலும் டொலரில் பிரச்சினையுள்ளது" எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினரும் பிரதி அமைச்சருகிய வசந்த பியதிஸ்ஸவும் குறித்த கூட்டத்தில் உரையாற்றினார்.

பாறுக் ஷிஹான்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now