சம்மாந்துறை செந்நெல் கிராமத்தில் 32 பாதைகள் சீரமைக்கப்படவ...
News
சம்மாந்துறை செந்நெல் கிராமத்தில் 32 பாதைகள் சீரமைக்கப்படவில்லை: பிரதேச சபை உறுப்பினர் ஆசிக் கோரிக்கை!
சம்மாந்துறை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட செந்நெல் கிராமப் பகுதியில் 32 பாதைகள் இதுவரை சீரமைக்கப்படாத நிலையில் காணப்படுவதுடன், வடிகான் வசதிகளற்ற மணல் பாதைகளில் மழைக்காலங்களில் நீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் போக்குவரத்துச் சிரமங்களை எதிர்கொள்வதாகப் பிரதேச சபை உறுப்பினர் ஆசிக் தெரிவித்துள்ளார்.
சம்மாந்துறை பிரதேச சபையின் இன்றைய (15) அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
குறித்த பகுதியில் உள்ள பாதைகள் மணல் பாதைகளாகக் காணப்படுவதுடன், முறையான வடிகான் வசதிகளும் ஏற்படுத்தப்படவில்லை. இதனால் மழைக்காலங்களில் பாதைகளில் நீர் தேங்கி நிற்பதால் அவற்றைப் பயன்படுத்துவதில் பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, குறித்த பாதைகளைப் புனரமைப்பதற்கான திட்டத்தில் உள்வாங்கி, அவற்றைச் சீரமைக்க விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
இதற்குப் பதிலளித்த பிரதேச சபைத் தவிசாளர் மாஹிர், அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் 101 பாதைகளைப் புனரமைப்பதற்கான முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
பிரதேச சபைக்குக் கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட இப்பட்டியலில் அனைத்துப் பிரதேச சபை வட்டாரங்களையும் சேர்ந்த பாதைகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதன்போது மீண்டும் கருத்துத் தெரிவித்த உறுப்பினர் ஆசிக், குறித்த பாதைகளுக்குக் கொங்கிரீட் இட்டு நிரந்தரமாகப் புனரமைக்க முடியாவிட்டாலும், பொதுமக்கள் தற்காலிகமாகப் பயன்படுத்தக்கூடிய வகையில் அவற்றைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
தமது பகுதியில் பல பாதைகள் இதுவரை அபிவிருத்தி செய்யப்படாத நிலையில் காணப்படுவதால், அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாகப் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாகவும் அவர் சபையின் கவனத்திற்குக் கொண்டுவந்தார்.
எனவே, மழைக்காலத்தில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் போக்குவரத்துப் பிரச்சினைகளைக் கருத்திற்கொண்டு, குறித்த பாதைகளைச் சீரமைப்பதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த வேண்டும் என உறுப்பினர் ஆசிக் மேலும் கோரிக்கை விடுத்தார்.
தில்சாத் பர்வீஸ்