தம்புள்ளை தண்டர்ஸ் உரிமையாளர் தமீம் ரஹ்மானுக்கு பிணை! - G...
தம்புள்ளை தண்டர்ஸ் உரிமையாளர் தமீம் ரஹ்மானுக்கு பிணை!
ஸ்ரீலங்கா பிரீமியர் லீக் 2024 கிரிக்கெட் போட்டியில் ஆட்ட நிர்ணயத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியதாக கூறப்படும் தம்புள்ளை கிரிக்கெட் அணியின் உரிமையாளரான தமீம் ரஹ்மானை பிணையில் விடுவிக்க கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே இன்று (07) உத்தரவிட்டுள்ளார்.
சந்தேக நபருக்கு 05 இலட்சம் ரூபா ரொக்கப் பிணையும், 10 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளும் வழங்க உத்தரவிடப்பட்டது.
கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக வெளிநாடு செல்ல முயற்சித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டு மே 22ஆம் திகதி ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.