பூக்கடை உரிமையாளரை கொலை செய்த சந்தேக நபர் கைது!
பூக்கடை உரிமையாளரை கொலை செய்த சந்தேக நபர் கைது!
அம்பலாங்கொடை அவசவத்தை சந்தி பகுதியில் பூக்கடை உரிமையாளரை வெட்டி படுகொலை செய்த சந்தேகநபர் சட்டத்தரணி ஊடாக அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வட்டுகெதர பிரதேசத்தை சேர்ந்த 27 வயதுடையவர் எனவும் குறித்த சந்தேக நபர் கொலை செய்யப்பட்ட பூக்கடை உரிமையாளரின் உதவியாளராக பணிபுரிந்தவர் என்பதும் தெரியாவந்துள்ளது.
உயிரிழந்த நபர் தனது மனைவியுடன் திருமணத்திற்கு புறம்பான உறவை வைத்திருந்தார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சந்தேகநபர் இந்த கொலையை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.