33 ஆவது ராஜன் கதிர்காமர் வெற்றிக் கிண்ண ஒருநாள் கிறிக்கெட...
News
33 ஆவது ராஜன் கதிர்காமர் வெற்றிக் கிண்ண ஒருநாள் கிறிக்கெட் போட்டி: வட்டுக்கோட்டை யாழப்பாணக்கல்லூரி 37 ஓட்டங்களால் வெற்றி!
33 ஆவது ராஜன் கதிர்காமர் வெற்றிக் கிண்ண ஒருநாள் கிறிக்கெட் போட்டியில் வட்டுக்கோட்டை யாழப்பாணக்கல்லூரி 37 ஓட்டங்களால் வெற்றி!
யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரிக்கும் (புனித பத்திரிசியார் கல்லூரி), வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கும் இடையிலான (50 Overs ) ராஜன் கதிர்காமர் வெற்றிக் கிண்ணத்துக்கான ஒரு நாள் கிறிக்கெட் போட்டி நேற்று காலை யாழ்ப்பாணக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற வட்டுக்கோட்டை யாழப்பாணக் கல்லூரி முதலில் துடுப்பாட தீர்மானித்தது.
யாழப்பாணக் கல்லூரி அணி சார்பாக சங்கீர்த் 60 பந்துகளை எதிர் கொண்டு 45 ஓட்டங்களை பெற்றார்
உ.கென்றெக்சன் 51 ஓட்டங்களை எதிர்கொண்டு 38 ஓட்டங்களை பெற்றார்.
அதேவேளை பத்திரிசியார் கல்லூரி அணிசார்பாக ம.ஸ்ரிப் ஆதித்யா 3 விக்கெட்டுகளை சாய்த்தார். 50 பந்துபரிமாற்றங்களின் நிறைவில் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி அணி 9 விக்கெட் இழப்பிற்கு 205 ஓட்டங்களை பெற்றிருந்தது.
206 ஓட்டங்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் துடுப்பாடிய யாழ்.புனித பத்திரிசியார் கல்லூரி் 44.1 பந்து பரிமாற்றங்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 168 ஓட்டங்களை பெற்றது.
புனித பத்திரிசியார் கல்லூரி அணிசார்பாக றொ.பேர்ளி டெனோவன் 37 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். ஆட்ட நாயகனாக யாழ்ப்பாணக் கல்லூரி அணிவீரர் சங்கீத் தெரிவனார்.
சகலதுறை ஆட்ட நாயகனாக யாழ்ப்பாணக் கல்லூரி அணிவீரர் ஹரிசனும் சிறந்த பந்து வீச்சாளராக சென் பற்றிக்ஸ் கல்லூரி அணி வீரர் ஆதித்யாவும் சிறந்த துடுப்பாட்ட நாயகனாக யாழ்ப்பாணக் கல்லூரி அணிவீரர் சங்கீத்தும் சிறந்த களத்தடுப்பு வீரனாக சென் பற்றிக்ஸ் கல்லூரி அணி வீரர் டிலக்சனும் தெரிவானார்கள்
இதுவரை நடைபெற்ற ராஜன் கதிர்காமர் வெற்றிக் கிண்ண ஒருநாள் போட்டியில் 24 தடவைகள் சென் பற்றிக்ஸ் கல்லூரியும், 08 தடவைகள் யாழ்ப்பாணக் கல்லூரியும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி கைவிடப்பட்டது.
பு.கஜிந்தன்