New Updates! Fresh news just arrived.

600 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொல்லப்பட்டு 36 வருடம் நிறைவு...

News

600 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொல்லப்பட்டு 36 வருடம் நிறைவு: ரணவிரு ஞாபகார்த்த நினைவு தூபியில் அனுஸ்டிப்பு!

June 11, 2026 6:04 pm
600 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொல்லப்பட்டு 36 வருடம் நிறைவு: ரணவிரு ஞாபகார்த்த  நினைவு தூபியில் அனுஸ்டிப்பு!
தமிழீழ விடுதலைப் புலிகளிடம் சரணடைந்த நிலையில் சுமார் 600 பொலிஸார் படுகொலை செய்யப்பட்டு 36 ஆண்டுகள் நிறைவடைந்ததினை அனுஸ்டிக்கும் முகமாக குறித்த நிகழ்வு இன்று வியாழக்கிழமை (11) அம்பாறை பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் அமைந்துள்ள ரணவிரு ஞாபகார்த்த நினைவு தூபியில் நடைபெற்றது.

இதன்படி, 1990 ஜூன் 11 அன்று தமிழீழ விடுதலைப் புலிகளினால் கொல்லப்பட்ட 600 காவல்துறை அதிகாரிகளினுடைய நினைவாக "அமைதி" என்னும் பெயரில் குறித்த மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

அம்பாறை பிரதேச பதில் உதவி பொலிஸ் அத்தியட்சகரான நுவன் தந்தநாராயண அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரினை வரவேற்றார்.

குறித்த நிகழ்வின் போது அம்பாறை மாவட்டத்தின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்ல உள்ளிட்ட பொலிஸ் உயரதிகாரிகள், பொலிஸார் மற்றும் ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும், குறித்த நிகழ்வின் முக்கிய அம்சமாக தமிழீழ விடுதலைப் புலிகளால் 1990 ஆம் ஆண்டு கடத்திக் கொல்லப்பட்ட பொலிஸார் உட்பட யுத்தத்தினால் உயிர்நீத்த மற்றும் கடந்த கால யுத்தம் உள்ளிட்ட இதர காரணங்களால் மரணமடைந்த பொலிஸாரினுடைய குடும்பங்களின் நலன் தொடர்பில் இதன் போது ஆராயப்பட்டன.

இது தவிர முதலில், அனைத்து மத சடங்குகளும் நடைபெற்ற பின்பு, நிகழ்வின் ஆரம்பத்தில் அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்லவால் பொலிஸ் கொடி அரை கம்பத்தில் ஏற்றப்பட்டதோடு, உயிர்நீர்த்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

மேலும், 1990 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அம்பாறை மாவட்டத்தினுடைய கல்முனை ,பொத்துவில் மற்றும் அக்கரைப்பற்று, சம்மாந்துறை, உள்ளிட்ட பல பொலீஸ் நிலையங்களினை முற்றுகையிட்ட புலிகள் சகல சிங்கள முஸ்லிம் பொலிஸார்களையும் ஆயுதங்களினையும் அள்ளிச் சென்றார்கள். அதன் பின்பு திருக்கோவில் பகுதியிலுள்ள ரூபஸ் குளம் காட்டுப் பகுதியில் சகல பொலிஸாரினையும் சுட்டுக் கொன்றதாக குறிப்பிடப்படுகின்றது.

பாறுக் ஷிஹான்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now