ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைது!
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைது!
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் ஹில்டன் ஹோட்டலின் கார் பார்க்கிங்கில் பிஎம்டபிள்யூ கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பான விசாரணை தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வந்திருந்தார்.
இது தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் வாக்குமூலம் வழங்கத் தயார் என நேற்று (22) முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தனது சட்டத்தரணி ஊடாக மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்த நிலையில் வாக்கு மூலம் வழங்க வந்திருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கில் ஆஜராகாததினால் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன முன்னாள் அமைச்சரான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவினை கைது செய்து ஆஜர்படுத்துமாறு இன்று பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.