சிங்கராஜா வனத்தில் பூச்சிகளை சேகரித்த 4 சீனர்கள்
News

சிங்கராஜா வனப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் பூச்சிகள் மற்றும் ஊர்வன வகைகளைச் சேகரித்துக் கொண்டிருந்த பெண் ஒருவர் உட்பட சீனாவைச் சேர்ந்த நால்வரை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
உடவலவ தேசிய பூங்காவின் பனஹடுவ வனப் பாதுகாப்பு அலுவலகத்துக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து சுமார் 40 வெவ்வேறு இனத்தைச் சேர்ந்த 250க்கும் மேற்பட்ட ஊர்வன மற்றும் பூச்சிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவர்கள் இதற்கு முன்னரும் இலங்கை வந்திருப்பது ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களும் கைப்பற்றப்பட்ட உயிரினங்களும் கலவானை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, சந்தேக நபர்களை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட உயிருள்ள மற்றும் இறந்த உயிரினங்களைச் சரியாக அடையாளம் காண்பதற்காக தேசிய அருங்காட்சியகத்துக்கு இன்றைய தினம் (10) அனுப்பி வைக்குமாறும், அதன் பின்னர் அவற்றை மீண்டும் சுற்றாடலில் சுதந்திரமாக விடுவிக்குமாறும் நீதிவான் கட்டளையிட்டுள்ளார்.
இதேவேளை, சில நாட்களுக்கு முன்னர் பபவ உத்தரகந்த வனப்பகுதியில் இவ்வாறானதொரு மரபணு திருட்டில் (Genetic smuggling) ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஜெர்மனியர்கள் இருவர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.