New Updates! Fresh news just arrived.

அமெரிக்க இராணுவ வானூர்தி விபத்துக்குள்ளானதில் 4 பணியாளர்க...

News

அமெரிக்க இராணுவ வானூர்தி விபத்துக்குள்ளானதில் 4 பணியாளர்கள் உயிரிழப்பு!

March 13, 2026 4:38 pm
அமெரிக்க இராணுவ வானூர்தி விபத்துக்குள்ளானதில் 4 பணியாளர்கள் உயிரிழப்பு!
ஈராக்கின் மேற்கு பகுதியில் விபத்துக்குள்ளான அமெரிக்க இராணுவ எரிபொருள் நிரப்பும் வானூர்தியில் பயணித்த ஆறு பணியாளர்களில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளை பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.

ஈராக்கின் மேற்கு வான்பரப்பில் வழமையான பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க இராணுவ வானூர்தி தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்து இடம்பெற்ற போது வானூர்தியில் மொத்தம் ஆறு பணியாளர்கள் இருந்துள்ளனர். இவர்களில் நால்வர் உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், ஏனைய இருவரின் நிலை குறித்து மேலதிக தேடுதல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த விபத்து எதனால் ஏற்பட்டது என்பது குறித்து அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளைப் பிரிவு விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now