New Updates! Fresh news just arrived.

யாழில் கத்தி முனையில் 5 பவுண் நகை திருட்டு: காலதாமதமாக வந...

News

யாழில் கத்தி முனையில் 5 பவுண் நகை திருட்டு: காலதாமதமாக வந்த மருதங்கேணி பொலிசார்!

March 8, 2026 1:01 pm
யாழில் கத்தி முனையில் 5 பவுண் நகை திருட்டு: காலதாமதமாக வந்த மருதங்கேணி பொலிசார்!
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, மணல்காடு சந்தியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் நள்ளிரவில் நகை கொள்ளை ஒன்று இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

இன்று அதிகாலை 1:00 மணியளவில் மதிலால் பாய்ந்து 3 திருடர்கள் குறித்த வீட்டுக்குள் புகுந்து வீட்டில் இருந்த கணவனை தாக்கிவிட்டு பின்னர் மனைவியின் கழுத்தில் கத்தியை வைத்து சுமார் 5 பவுண் நகையை அவரது கழுத்திலிருந்து அறுத்து எடுத்தனர்.

பின்னர் குறித்த பெண்ணையும் தாக்கியுள்ளதுடன் அரை மணி நேரதிற்கும் அதிகநேரம் மணல் மண் அள்ளி கொட்டியும், இரும்பாலும் தாக்கியுள்ளனர்.

இதில் கணவர் படுக்கயமடைந்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் இடம்பெற்றபோது மருதங்கேணி பொலிசார் மற்றும் அவசர இலக்கங்களான 119, 118 ஆகியவற்றிற்கு அழைப்பு மேற்கொண்டு உதவி கோரியும் பொலிசார் 8 மணிநேரம் கழித்து சரியாக காலை 9:15 மணிக்கே சம்பவம் நடந்த இடத்திற்கு சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த வீட்டில் நேற்றுடன் மூன்றாவது தடவையாக கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த கொள்ளை சம்பவத்தில் 3 கொள்ளையர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டமை சிசிடிவி காணொளியில் பதிவாகியுள்ளது.

பு.கஜிந்தன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now