New Updates! Fresh news just arrived.

5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் வினாத்தாள் கசிவு: அதிகாரிக்க்க...

News

5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் வினாத்தாள் கசிவு: அதிகாரிக்க்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு!

February 24, 2026 1:56 am
5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் வினாத்தாள் கசிவு: அதிகாரிக்க்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு!
2024 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையினுடைய வினாத்தாள் கசிந்தமை தொடர்பில் வழங்கப்பட்ட உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை நடைமுறைப்படுத்தத் தவறியமைக்காக, தேசிய கல்வி நிறுவகத்தினுடைய முன்னாள் பணிப்பாளரான ஐ.ஜி.எஸ். பிரேமதிலக்கவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றப்பத்திரிகையினை தாக்கல் செய்யுமாறு சட்டமா அதிபருக்கு உயர் நீதிமன்றமானது நேற்று (23) உத்தரவிட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்றிருந்த பரீட்சையில் மூன்று வினாக்கள் முன்கூட்டியே கசிந்திருந்தமை தொடர்பில் மாணவர்களினுடைய பெற்றோர்களால் 4 அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இம்மனுக்களினை விசாரித்த உயர் நீதிமன்றம், 2024 டிசம்பர் மாதம் 31 அன்று தீர்ப்பளித்தது. குறித்த தீர்ப்பின்படி, அடிப்படை உரிமை மீறலுக்காக பிரதிவாதியான ஐ.ஜி.எஸ்.பிரேமதிலக்க தனது சொந்தப் பணத்தில் இருந்து 3 மில்லியன் ரூபாவினை அரசாங்கத்திற்கு இழப்பீடாக வழங்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டிருந்தது.

குறித்த தொகையினை தீர்ப்பு வழங்கப்பட்ட நாளில் இருந்து நான்கு வாரங்களுக்குள் செலுத்தி முடிக்க வேண்டும் என்று நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது.

குறித்த காலக்கெடுவிற்குள் இழப்பீட்டுத் தொகையினை செலுத்தத் தவறியதன் ஊடாக, அவர் நீதிமன்ற உத்தரவினை உதாசீனம் செய்துள்ளதாக மனுதாரர் தரப்பில் முன்னிலையான சட்டத்தரணி அஞ்சன ரத்னசிறி நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனைப் பரிசீலித்த பிரதம நீதியரசரான பிரீத்தி பத்மன் சூரசேன, அச்சல வெங்கப்புலி மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோரடங்கிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம், நீதிமன்றத்தினை அவமதித்த குற்றச்சாட்டின் கீழ் குறித்த அதிகாரிக்கு எதிராகவும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சட்டமா அதிபருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அத்தோடு, எதிர்வரும் மார்ச் மாதம் 26 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறும் ஐ.ஜி.எஸ்.பிரேமதிலக்கவுக்கு அறிவித்தலானது விடுக்கப்பட்டுள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now