பொது மக்களுக்கு சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி விட...
News
பொது மக்களுக்கு சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி விடுக்கும் விசேட அறிவித்தல்!
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் டெங்கு நோயாளர்கள் இனம்காணப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். எமது அண்மைய கள ஆய்வுகளின் போது பின்வருவன இனங்காணப்பட்டுள்ளன.
மூடப்படாத கிணறுகள், குழாய்க்கிணறுகள், நீர்த்தாங்கிகள், கூரைப்பீலிகள், பராமரிக்கப்பாடாத மலசலகூடங்கள்,மூடப்பட்டுள்ள வீடுகள்,பராமரிக்கப்படாத வெற்றுக்காணிகள்,கடல் ஓரங்களில் காணப்படும் தோணிகள்,படகுகள் என்பன ஆட்கொல்லி டெங்கு நுளம்புகளின் பெருக்கத்திற்கு மிகவும் சாதகமான காரணியாக உள்ளன.
எனவே கிணறுகள், குழாய்க்கிணறுகள்,நீர்தாங்கிகள்,ஆகியவற்றை நுளம்புவலைகளால் மூடுமாறும்,கூரைப்பீலிகளை அகற்றிவிடுமாறும்,மூடப்பட்ட,வீடுகள், வெற்றுவளவுகளை பராமரிக்கப்படாத வெற்றுக்காணிகள்,வீடுகள்,படகுகள்,தோணிகள் ஆகியவற்றை நுளம்புகள் பெருகாத வண்ணம் தொடர்ச்சியாக பராமரிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
அத்துடன் உங்கள் சுற்றாடலில் நுளம்பு பெருகும் சாதனங்களை இல்லாதொழிக்குமாறும் வேண்டப்படுகின்றீர்கள்.மேற்படி நிகழ்புகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி உங்களையும் உங்கள் பிள்ளைச்செல்வங்களையும் டெங்கு நோயிலிருந்து பாதுகாக்குமாறு வேண்டப்படுவதோடு (தவறும் பட்சத்தில் தங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதனையும் மிகமனவருத்ததுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
வருமுன் காப்போம்இ வளமாய் வாழ்வோம்இ டெங்கு மரணத்தை தவிர்ப்போம்.நீங்கள் எங்களுக்கு வழங்கிவரும் ஒத்துழைப்புகளுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன் என சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
பாறுக் ஷிஹான்