New Updates! Fresh news just arrived.

56 ஆக உயர்ந்த டெங்கு மரணங்கள்

News

56 ஆக உயர்ந்த டெங்கு மரணங்கள்

July 21, 2026 12:20 pm
56 ஆக உயர்ந்த டெங்கு மரணங்கள்
கடந்த 24 மணித்தியாலங்களில் மட்டும் டெங்கு நோய் காரணமாக 3 மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், மொத்த டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது.

தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, இந்த ஆண்டில் இதுவரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 77,000 ஆக உயர்ந்துள்ளது.

இதற்கமைய, நேற்று (20) ஆம் திகதி ஒரே நாளில் 984 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் தரவுகளின்படி, தற்போது நாடு முழுவதும் 162 சுகாதார வைத்திய அதிகாரி (MOH) பிரிவுகள் தொடர்ந்தும் அதிஅபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

கடந்த சில மாதங்களில் நோயாளர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி அவதானிக்கப்பட்டுள்ளதுடன், மே மாதத்தில் 8,590 நோயாளர்களும், ஜூன் மாதத்தில் 21,537 நோயாளர்களும், ஜூலை மாதத்தின் கடந்த 20 நாட்களில் மட்டும் 21,650 நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நோயாளர்களின் இறப்பு விகிதம் 0.07% ஆகப் பதிவாகியுள்ளது.

மாகாண மட்டத்தில் ஆராயும்போது, மேல் மாகாணத்திலேயே அதிகளவிலான நோயாளர்கள் பதிவாகியுள்ளதோடு, மொத்த நோயாளர்களில் 52.67% அதாவது 40,573 நோயாளர்களாகும்.

தென் மாகாணத்தில் 11,867 நோயாளர்களும் (15.41%), மத்திய மாகாணத்தில் 6,492 நோயாளர்களும் (8.43%) பதிவுசெய்யப்பட்டுள்ளனர்.

மாவட்ட மட்டத்தில் அதிக பாதிப்பை எதிர்கொண்டுள்ள மாவட்டமாக கம்பஹா மாவட்டம் காணப்படுவதுடன், அங்கிருந்து 16,164 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன், கொழும்பு மாவட்டத்தில் 15,314 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now