சிறுவர்கள் தொடர்பான வழக்கில் மெட்டாவுக்கு 567 மில்லியன் ட...
News
சிறுவர்கள் தொடர்பான வழக்கில் மெட்டாவுக்கு 567 மில்லியன் டொலர் அபராதம்
சிறுவர்களுக்கு சமூக வலைத்தளங்கள் ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகள் குறித்து போதிய எச்சரிக்கைகளை வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டில், மெட்டா நிறுவனத்திற்கு 567 மில்லியன் அமெரிக்க டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாநில நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்ட நிலையில், நேற்று (06) நீதிபதி பிரையன் பீட்ஷீட் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பான விவகாரத்தில் மெட்டா நிறுவனத்திற்கு எதிராக வழங்கப்பட்டுள்ள முக்கியத்துவம் வாய்ந்த மிகப்பெரிய தீர்ப்புகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது.
தீர்ப்பின் அடிப்படையில் விதிக்கப்பட்டுள்ள அபராதத் தொகையை, எதிர்காலத்தில் பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தடுக்கும் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும் நிதியில் மெட்டா செலுத்த வேண்டும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.
இதே வழக்கில் முன்னதாக மெட்டா நிறுவனத்திற்கு 375 மில்லியன் அமெரிக்க டொலர் அபராதம் செலுத்துமாறு உத்தரவிடப்பட்டிருந்தது. அந்தத் தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்ய மெட்டா நடவடிக்கை எடுத்து வருகின்றது.
Facebook, Instagram, WhatsApp மற்றும் Threads உள்ளிட்ட பிரபல சமூக வலைத்தளங்களை நிர்வகிக்கும் நிறுவனமாக மெட்டா செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.