New Updates! Fresh news just arrived.

இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவ...

News

இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

November 15, 2025 5:38 am
இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

2026 ஆம் ஆண்டுக்கான பாடசாலை பரீட்சை  அட்டவணையை வெளியிட்டுள்ளதாக இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 





இந்த நேர அட்டவணைப்படி, 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை 2026 பெப்ரவரி 17ம்  திகதி முதல்  26ம் திகதி வரை நடைபெறும்.





2026 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் 9 ஆம் திகதியும், 2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை ஆகஸ்ட்  10ம் திகதி முதல் செப்டம்பர் 5 வரை நடைபெறும்.





2027 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை முதன்முறையாக எழுதும் மாணவர்களுக்கான பொதுத் தகவல் தொழில்நுட்ப (GIT) பரீட்சை  2026 அக்டோபர் 24ம் திகதி  நடைபெறும். 





2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை 2026 டிசம்பர் 8ம் திகதி முதல்  17ம் திகதி வரை நடைபெறும் என இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 


Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now