New Updates! Fresh news just arrived.

யாழ். கடற்கரையில் கரையொதுங்கிய பௌத்த மதத்துடன் தொடர்புடைய...

News

யாழ். கடற்கரையில் கரையொதுங்கிய பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை!

November 17, 2025 12:57 pm
யாழ். கடற்கரையில் கரையொதுங்கிய பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை!

யாழ்ப்பாணகடற்கரையில் பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை ஒன்று கரையொதுங்கியுள்ளது. வளலாய் பகுதியில் கடற்கரையில் இன்றையதினம் திங்கட்கிழமை குறித்த சிலை கரையொதுங்கியுள்ளது.





சிலையின் கைகள் சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. வேறு நாட்டவர்கள் தங்கள் நாட்டு கடலில் போட்ட சிலையே வளலாய் பகுதியில் கரையொதுங்கி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.





அத்தோடு, மியான்மார் நாட்டிலும் பௌத்தர்கள் வாழும் நிலையில் , அங்கு உயிரிழந்தவர்களினுடைய நினைவாக கடலில் விடப்படும் மூங்கிலிலான தொப்பங்களானது கடந்த காலங்களில் வடமராட்சி பகுதிகளில் கரையொதுங்கி இருக்கின்றன.





மேலும், சேதமடைந்துள்ள சிலையினை கடலில் போட்ட நிலையில் குறித்த சிலை வளலாய் பகுதியில் கரையொதுங்கி இருக்கலாம் எனவும் நம்பப்படுகின்றது.





குறித்த சிலை தற்போது வளலாய் கடற்தொழிலாளர் சங்க கட்டடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள நிலையில் , சிலை கரையொதுங்கியமை தொடர்பில் அச்சுவேலி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.





பு.கஜிந்தன்






https://youtu.be/XYASzXeHSww?si=X3VXLDTjIQOXcn4x

Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now