New Updates! Fresh news just arrived.

கோடாலிக் கல்லு மாவீரர் துயிலும் இல்லத்தின் சிரமதான பணிகள்...

News

கோடாலிக் கல்லு மாவீரர் துயிலும் இல்லத்தின் சிரமதான பணிகள் ஆரம்பம்!

November 17, 2025 2:21 pm
கோடாலிக் கல்லு மாவீரர் துயிலும் இல்லத்தின் சிரமதான பணிகள் ஆரம்பம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கோடாலிக்கல்லு மாவீரர் துயிலும் இல்லத்தினுடைய 2025 ஆம் ஆண்டுக்கான மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை அனுஷ்டிப்பதற்கான சிரமதான பணிகள் நேற்று (16) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.





மாவீரர்களுக்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டு மலர் வணக்கம் செலுத்தப்பட்டதை தொடர்ந்து சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டன.





அந்த வகையிலே கோடாலிக்கல்லு மாவீரர் துயிலும் இல்ல பிரதேசத்தை அண்டிய அயல் கிராமங்களில் உள்ள மக்கள் மாவீரர்களின் பெற்றோர் உரித்துடையோர் அனைவரையும் குறித்த சிரமதான பணிக்கு வருகை தந்து ஒத்துழைப்பு வழங்குமாறும் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளில் அனைத்து உறவுகளையும் கலந்து கொள்ளுமாறும் பணிக்குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now