இலஞ்சம் பெற்றுக்கொண்ட அதிகாரிக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை...
News
இலஞ்சம் பெற்றுக்கொண்ட அதிகாரிக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை!
வெல்லவாய, வீரசேகரகம பகுதியில் வசித்து வரும் கோழிப் பண்ணை நடத்தும் வியாபாரியிடமிருந்து 15,000 ரூபாவினை இலஞ்சமாக பெற்றுக்கொண்ட சம்பவம் தொடர்பில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட ஹப்புத்தளை மாவட்ட தொழிலாளர் அலுவலகத்தின் தொழிலாளர் அதிகாரிக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 2009 செப்டம்பர் 02 ஆம் திகதி இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவிற்கு கிடைத்த எழுத்துப்பூர்வமான புகாரின் அடிப்படையில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் கொழும்பு உயர்நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்ட வழக்குடன் தொடர்புடையதாகும்.
முன்வைக்கப்பட்ட அனைத்து சாட்சிகளையும் பரிசீலித்த பின்னர், சம்பந்தப்பட்ட நபருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் மூன்றிலும் அவர் குற்றவாளி என உயர்நீதிமன்ற நீதிபதி முஹம்மது மிஹாயில் அவர்கள் தீர்ப்பளித்துள்ளார்.
அதன்படி, ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் ஒரே நேரத்தில் அமுலாகும் வகையில் தலா 06 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் 5,000 ரூபா வீதம் அபராதமும், மேலும் இலஞ்சமாக பெற்ற 15,000 ரூபா தொகைக்கு சமமான கூடுதல் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.