New Updates! Fresh news just arrived.

இரு அமைச்சுக்களுக்கான ஒதுக்கீடுகள் மேலதிக வாக்குகளால் நிற...

News

இரு அமைச்சுக்களுக்கான ஒதுக்கீடுகள் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!

November 17, 2025 4:14 pm
இரு அமைச்சுக்களுக்கான ஒதுக்கீடுகள் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!

2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் குழுநிலை விவாதத்தின் இரண்டாவது நாளான இன்று (17) விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சுக்கான செலவுத்தலைப்பு (112) 80 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.





குழு நிலை விவாதத்திற்கு பின்னர் 6.40 மணியளவில் இலங்கைத் தமிழரசுக் கட்சியினுடைய பாராளுமன்ற உறுப்பினரான சாணக்கியன் இராசமாணிக்கம் குறித்த செலவுத் தலைப்புக்கு வாக்கெடுப்பைக் கோரினார்.





இதற்கமைவாக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் குறித்த செலவுத் தலைப்புக்கான ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக 87 வாக்குகளும், எதிராக 7 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.





அத்துடன், இன்றையதினம் குழு நிலை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுக்கான செலவுத்தலைப்புக்கு (110) வாக்கெடுப்பை நடத்துமாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் கோரிக்கை விடுத்தனர்.





மேலும், இதற்கமைவாக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் குறித்த செலவுத் தலைப்புக்களுக்கான ஒதுக்கீடுகளுக்கு ஆதரவாக 87 வாக்குகளும், எதிராக 7 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.






https://youtu.be/fJK1NHXAgZ8?si=yQV3pySNzUVZy_zc

Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now