New Updates! Fresh news just arrived.

இலங்கை தபால் திணைக்களத்தின் 36 புதிய சாரதிகளுக்கான நியமனக...

News

இலங்கை தபால் திணைக்களத்தின் 36 புதிய சாரதிகளுக்கான நியமனக் கடிதங்கள் கையளிப்பு!

November 18, 2025 11:40 am
இலங்கை தபால் திணைக்களத்தின் 36 புதிய சாரதிகளுக்கான நியமனக் கடிதங்கள் கையளிப்பு!

இலங்கை தபால் திணைக்களத்தின் தபால் சாரதி (திறந்த) பதவியில் புதிதாக நியமனம் பெற்றவர்களுக்கு நியமனக் கடிதங்களை கையளிக்கும் நிகழ்வு ஊடக பிரதி அமைச்சர் கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன மற்றும் தபால் மா அதிபர் ருவன் சத்குமார தலைமையில் இன்று (18) அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.





ஆரம்ப திறன் வகுப்பு III ஆம் தரத்திலான தபால் சாரதிகள் (திறந்த பதவியில் 40 சாரதிகளுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஜூன் மாதத்தில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் 1500க்கும் அதிகமான விண்ணப்பங்கள் இலங்கை தபால் திணைக்களத்திற்குக் கிடைத்ததுடன் அவர்களில் பிரயோகப் பரீட்சை மற்றும் பொது அறிவு பரீட்சை என்பவற்றில் காட்டிய திறமை அடிப்படையில் இந்த நியமனக் கடிதங்கள், தங்களுக்குக் குறிப்பிடப்பட்ட தகுதிகளை முறையாகப் பூர்த்தி செய்த 36 நபர்களுக்கு வழங்கப்பட்டன.





இந்த புதிய தபால் சாரதிகளுக்கு இன்று (18) முதல் நியமனக் கடிதங்கள் வழங்கப்படும், மேலும் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் நடைபெறும் விசேட சேவைப் பயிற்சிக்குப் பின்னர் தபால் போக்குவரத்துப் பிரிவுக்கு அவர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.






https://youtu.be/eSvUUOhs_-Q?si=MCCWkpzhB73pKMLb

Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now