New Updates! Fresh news just arrived.

காலநிலையில் திடீர் மாற்றம் - இந்தியாவுக்கு திருப்பி அனுப்...

News

காலநிலையில் திடீர் மாற்றம் - இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்ட இலங்கை விமானம்

November 19, 2025 6:10 am
காலநிலையில் திடீர் மாற்றம் - இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்ட இலங்கை விமானம்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கவிருந்த மூன்று விமானங்கள் மத்தள விமான நிலையம் மற்றும் இந்தியாவின் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன.





இன்று (19) காலை நிலவிய கடும் பனிமூட்டத்துடன் கூடிய காலநிலை காரணமாகவே இந்த விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





சீனாவின் குவாங்சோவிலிருந்து வந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ருடு- 881 விமானம் மற்றும் சவூதி அரேபியாவின் ரியாத் நகரிலிருந்து வந்த ருடு-266 விமானம் ஆகியன மத்தள சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டதுடன் சவூதி அரேபியாவின் தம்மாமிலிருந்து வந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ருடு-254 விமானம் இந்தியாவின் கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டது.





அத்துடன் காலையில் இருந்த அசாதாரண நிலைமை நீங்கி தற்போது சீரான வானிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now