கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் நீரழிவு நோய் தொடர்பான...
கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் நீரழிவு நோய் தொடர்பான விழிப்பூட்டல்!
உலக நீரழிவு தின விழிப்பூட்டல் செயலமர்வு நேற்றையதினம் (18) கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் இடம்பெற்றது.
இந்த செயலமர்வின் போது நீரழிவு நோய், உயர் குருதி அமுக்கம், கொலஸ்ட்ரால் போன்ற மூன்று புத்தகங்களை தமிழில் எழுதி வெளியிட்ட வைத்திய நிபுணர் வைத்தியர் செல்லத்துரை பிரசாத், யாழ் நீரழிவு கழகத்தினரால் கௌரவிக்கப்பட்டார். கண் வைத்திய நிபுணர் வைத்தியர் மலரவன், சிறுநீரக சத்திர சிகிச்சை நிபுணர் பீ.பாலகோபி, யாழ். நீரழிவு கழக தலைவர் தி.மைக்கல் ஆகியோரால் மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டது.
இதன்போது வைத்தியர் செ.பிரசாத்தினால் 300 புத்தகங்கள் இலவசமாக வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு யாழ். நீரழிவு கழகத்தால் இலவச பரிசோதனைகள், விழிப்புணர்வுகள் மற்றும் செயலமர்வுகள் பல இடங்களில் மக்களுக்கு இலவசமாக செயல்படுத்தப்பட்டு வருவதுவும் குறிப்பிடத்தக்கது.
பு.கஜிந்தன்