New Updates! Fresh news just arrived.

பிளிகண்டாமலை தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக நீதிமன்றம் தடை ...

News

பிளிகண்டாமலை தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக நீதிமன்றம் தடை உத்தரவு!

November 19, 2025 2:12 pm
பிளிகண்டாமலை தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக நீதிமன்றம் தடை உத்தரவு!

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிளிகண்டாமலை தோட்ட மக்கள், தோட்ட உரிமையாளருக்கு எதிராக நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கின் அடிப்படையில் இந்த உத்தரவு இன்று பிறப்பிக்கப்பட்டது.





இந்தத் தோட்டத்தில் சுமார் 45 குடும்பங்கள் 60 வருடங்களுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். இறுதியாக இந்தத் தோட்டத்தை வாங்கிய உரிமையாளர், மக்களின் அடிப்படை வசதிகளுக்குத் தடை ஏற்படுத்தி வந்த காரணத்தினால் தோட்ட மக்கள் தற்போதைய உரிமையாளருக்கு எதிராக வழக்கை தொடர்ந்தனர்.





குறிப்பாக, தோட்டத்திற்குச் செல்லும் பிரதான வீதியை வழிமறித்தல், தோட்ட மக்கள் விவசாயத்தில் ஈடுபட்ட காணிகளை அபகரித்தல், தோட்டத்தில் இருந்த பழைய பாடசாலை கட்டிடத்தை அபகரித்தல் மற்றும் மக்களின் குடிநீர் விநியோகத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தியமை உள்ளிட்ட காரணிகளை அடிப்படையாக கொண்டு வழக்கு தொடரப்பட்டது.





இதன் அடிப்படையில், வழக்கு முடியும் வரை தோட்டத்தின் உரிமையாளரால் தோட்ட எல்லைக்குள் எந்த விதமான செயற்பாடுகளையும் முன்னெடுக்க முடியாது என மாவட்ட நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.





நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்தத் தடை உத்தரவு தொடர்பான அறிவித்தல், தோட்ட உரிமையாளருக்கும், பொலிஸாருக்கும், பொதுமக்களுக்கும் வழங்கப்படும் என சட்டத்தரணி சுரேஷ் தெரிவித்தார்.






https://youtu.be/Wxnmcs_yNFs?si=Wc3zC7gMK28Dm_n2

Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now