New Updates! Fresh news just arrived.

சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கான கட்டணங்களில் திருத்த...

News

சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கான கட்டணங்களில் திருத்தம் - வெளியானது விசேட வர்த்தமானி அறிவிப்பு

November 20, 2025 4:06 am
சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கான கட்டணங்களில் திருத்தம் - வெளியானது விசேட வர்த்தமானி அறிவிப்பு

மோட்டார் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட புதிய விதிமுறைகளைத் தொடர்ந்து, இலங்கை பிரஜைகள் மற்றும் வெளிநாட்டினருக்கான சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்குவது தொடர்பான கட்டணங்களில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.





அதன்படி, 2025 நவம்பர் 17 ஆம் திகதி அன்று வெளியிடப்பட்ட வர்த்தமானி இலக்கம் 2463/04 இன் படி, ஏற்கனவே வெளிநாட்டு சாரதி அனுமதிப்பத்திரம் வைத்திருக்கும் இலங்கை பொதுமகன் ஒருவருக்கு சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கான கட்டணம் ரூ. 30,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.





அதே பிரிவில் உள்ள ஒரு வெளிநாட்டினருக்கான கட்டணம் ரூ. 60,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.





மேலும், இலங்கை பிரஜை அல்லாத ஒருவருக்கு சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குதல், புதுப்பித்தல் மற்றும் மாற்றுதல் ஆகியவற்றுக்கான புதுப்பிக்கப்பட்ட கட்டணங்களும் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.





இலங்கை பிரஜை அல்லாத ஒருவருக்கு சாரதி அனுமதிப்பத்திரத்தை வழங்குவதற்கு ரூ. 45,000 மற்றும் புதுப்பிப்புகளுக்கு ரூ. 15,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.





மேலும், இலங்கை பிரஜைகள் மற்றும் வெளிநாட்டினர் ஆகிய இரு தரப்பினருக்கும் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திர கட்டணங்களும் பல கால வகைகளின் அடிப்படையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.


Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now