தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்கள் தொடர்பாக மத்திய வங்கி வ...
தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்கள் தொடர்பாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவித்தல்
இலங்கையில் தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்கள் தொடர்பான நிறுவனங்கள், செயலிகள் மற்றும் குழுக்கள் குறித்து இலங்கை மத்திய வங்கி (CBSL) பொதுமக்களுக்கான ஒரு முக்கியமான அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
திருத்தப்பட்ட 1988ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க வங்கித் தொழில் சட்டத்தின் பிரிவு 83 (C) இன் கீழ், இந்த நிறுவனங்கள் அனைத்தும் சட்டவிரோதமான பிரமிட் திட்டங்களில் ஈடுபடுகின்றன என மத்திய வங்கி உறுதி செய்துள்ளது.
புதிதாக உறுதி செய்யப்பட்ட “SGO/sgomine.com” உட்பட, 23 நிறுவனங்கள்/செயலிகள்/குழுக்கள் தடைசெய்யப்பட்ட திட்டங்களில் ஈடுபடுவதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.
