New Updates! Fresh news just arrived.

வரலாற்று சாதனை படைத்த உள்நாட்டு இறைவரித் திணைக்களம் - Gur...

News

வரலாற்று சாதனை படைத்த உள்நாட்டு இறைவரித் திணைக்களம்

November 20, 2025 7:19 am
வரலாற்று சாதனை படைத்த உள்நாட்டு இறைவரித் திணைக்களம்

வரலாற்றில் 2025 நவ. 17 வரையான காலப்பகுதியில் அதிகப்படியான வரி வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.





இந்த மொத்த வரி வருமானம் ரூ. 2,002,241 மில்லியன் (ரூபா 2,002.241 பில்லியன்) ஆகும்.





2024 ஆம் ஆண்டில் இது ரூ. 1,942.162 பில்லியன் ஆக பதிவாகியிருந்தது.





எனவே, 2024 ஆம் ஆண்டின் மொத்த வரி வருமானத்துடன் ஒப்பிடும்போது இவ்வருடம் ரூ. 60,079 மில்லியன் அதிகமாகும்.





இதன்மூலம் அரச நிதி நிலையினை பலமாக முன்னெடுப்பதற்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அதியுயர்ந்த பங்களிப்பினை வழங்கியுள்ளது.


Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now