உடுவிலில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை: பெருமளவிலான ...
உடுவிலில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை: பெருமளவிலான கோடா மீட்பு!
சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட உடுவில் பகுதியில் நேற்றிரவு கசிப்பு உற்பத்தி நிலையத்தினை பொலிஸார் முற்றுகையிடப்பட்டது.
இதன்போது கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 26 வயது இளைஞன், 1 இலட்சத்து 80ஆயிரம் மில்லிலீட்டர் கோடாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் நீண்ட காலமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டுக்கொண்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பு.கஜிந்தன்