உலக மனநல வாரத்தினை முன்னிட்டு பிரதேச மட்டத்தில் உளவளத் து...
உலக மனநல வாரத்தினை முன்னிட்டு பிரதேச மட்டத்தில் உளவளத் துணை நிகழ்வும் சான்றிதழ்கள் வழங்குதலும்!
அவசர மற்றும் அனர்த்த சந்தர்ப்பங்களில் உளநலம் எனும் கருப்பொருளின் கீழ் கொண்டாடப்படும் உலக மனநல தினத்தையொட்டி கிராமிய அபிவிருத்தி சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் உலவளத் துணை பிரிவு பணிப்பாளரின் வேண்டுகோளுக்கிணங்க மாவட்ட மட்டத்தில் உளவளத் துணை உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வும் திருமணத்திற்கு முந்திய உளவளத் துணை பாடநெறியினை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வானது ஆலையடிவேம்பு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் (20) ஆம் திகதி மாவட்ட உளவளத்துணை இணைப்பாளர் மனூஸ் அபூபக்கர் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். ஜெகராஜன் அவர்களும் கௌரவ அதிதிகளாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர். திரவியராஜ் அவர்களும் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் உளநல வைத்தியர் யூ.எல்.ஷராப்தீன் அவர்களும் நிர்வாக கிராம உத்தியோகத்தர் அவர்களும் மாவட்ட ஏனைய உளவளத் துணை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் அவர்களால் உலவளத் துணையின் முக்கியத்துவம் தற்காலத்தில் அம்பாறை மாவட்டத்தில் ஆண்களின் தற்கொலை வீதமே அதிகரித்துள்ளதாகவும் ஆகவே இந்த திருமணத்துக்கு முந்திய உளவளத் துணைப் பாட நெறியை ஆண்களுக்கும் வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
அத்துடன் வைத்தியர் அவர்களினால் அவசர மற்றும் அனைத்து சந்தர்ப்பங்களில் உளநலம் பற்றிய சில உரைகளும் நிகழ்த்தப்பட்டதுடன் திருமணத்திற்கு முந்திய உளவளத் துணை மற்றும் வாழ்க்கை ஆற்றல்கள் கற்கைநெறியினை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு அதிதிகளால் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.