பதில் பிரதம நீதியரசராக உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி அந்தணி...
News
பதில் பிரதம நீதியரசராக உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி அந்தணி லலித் ஷிரான் குணரத்ன நியமனம்!
உச்ச நீதிமன்ற நீதிபதி அந்தணி லலித் ஷிரான் குணரத்ன, இன்று (22) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் முன்னிலையில் பதில் பிரதம நீதியரசராக பதவியேற்றார்.
பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேனவுக்கு 2025-11-22 தொடக்கம் 2025-11-27 வரை வெளிநாடு சென்றுள்ள நிலையில், அவர் நாடு திரும்பும் வரைக்கும் ஜனாதிபதி இந்தகுறித்த நியமனத்தினை வழங்கியுள்ளார்.