உயர் தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு: குற்றப் புலனாய்வுத் த...
உயர் தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு: குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு!
இம்முறை இடம்பெறும் க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள் பரீட்சைக்கு முன்னரே கசிந்ததாக வெளியான தகவல்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு பரீட்சைகள் திணைக்களம், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் முறைப்பாடு செய்துள்ளது.
கடந்த வாரம் பிரதிப் பரீட்சைகள் ஆணையாளரால் குறித்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பொருளியல் வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதாக கடந்த நாட்களில் சமூக ஊடகங்களில் பல்வேறு செய்திகள் பரவியிருந்தன.
இது தொடர்ப்பில் பரீட்சைகள் திணைக்களத்தினால் மேற்கொண்ட உள்ளக விசாரணைகாளில், வினாத்தாள் கசிந்திருப்பதற்க்கான எந்தவொரு உறுதியான தகவலும் கிடைக்கவில்லை எனவும் குறித்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், இது குறித்து முறையான மற்றும் விரிவான விசாரணையை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு கோரி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.