அட்டை பண்ணைக்கு காவலுக்கு சென்ற இளைஞர் கடலில் மூழ்கி பலி!...
அட்டை பண்ணைக்கு காவலுக்கு சென்ற இளைஞர் கடலில் மூழ்கி பலி!
யாழ்ப்பாணத்தில் அட்டை பண்ணைக்கு காவலுக்கு சென்ற இளைஞர் கடலில் இறங்கிய நிலையில் அலை இழுத்து சென்ரதில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவர் இளவாலை - தும்பளை பகுதியினைச் சேர்ந்த ஜோன்ஸன் ஸ்ரிபன் மதிவாணன் (வயது 18) என்கின்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த இளைஞன் யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியிலுள்ள தனது உறவினரின் வீட்டிற்கு சென்றுள்ளார். இவரினுடைய மாமனார் அட்டை பண்ணையினை நடாத்தி வருகிம் நிலையில் குறித்த இளைஞனும் வேறொருவரும் நேற்றிரவு அட்டை பண்ணைக்கு காவலுக்கு சென்றுள்ளனர்.
குறித்த இளைஞன் கடலில் இறங்கி சிறிது தூரம் சென்ற நிலையில் அவரினை அலை இழுத்து சென்றதினால் அவலக்குரல் எழுப்பியுள்ள நிலையில் அவருடன் சேர்ந்து சென்றவருக்கும் நீச்சல் தெரியாத காரணத்தினால் அவராலும் குறித்த இளைஞனை காப்பாற்ற முடியவில்லை.
இதன்பின்னர் ஊர் மக்கள் இணைந்து, நீரில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞனை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நிலையில் இன்று காலை அவரது சடலம் அட்டை பண்ணைக்கு அருகாமையில் மிதந்தவாறு காணப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவரது சடலம்மீதான மரண விசாரணைகளினை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்தத்துடன், உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பு.கஜிந்தன்