யாழில் 10 ஆயிரம் மில்லிலீட்டர் கசிப்புடன் பெண் கைது! - Gu...
யாழில் 10 ஆயிரம் மில்லிலீட்டர் கசிப்புடன் பெண் கைது!
10 ஆயிரம் மில்லிலீட்டர் கசிப்புடன் 42 வயதுடைய பெண் ஒருவர் நேற்றிரவு ஏழாலை தெற்கு, மயிலங்காடு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் நீண்ட காலமாக கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த நிலையில் நேற்றிரவு 10 ஆயிரம் மில்லிலீட்டர் கசிப்புடன் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. விசாரணைகளினை தொடர்ந்து அவரினை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளினை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பு.கஜிந்தன்