யாழில் போதை மாத்திரைகளுடன் நான்கு இளைஞர்கள் கைது!
யாழில் போதை மாத்திரைகளுடன் நான்கு இளைஞர்கள் கைது!
போதை மாத்திரைகளை உடைமையில் வைத்திருந்த சந்தேகநபர்கள் நால்வர் நேற்றையதினம் யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டனர். இதன்போது அவர்களிடமிருந்து 42 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாணம் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
விசாரணைகளின் பின்பு அவர்களினை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளினை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பு.கஜிந்தன்