New Updates! Fresh news just arrived.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொத்துவில் தொகுதி இணை அமைப்பாளராக...

News

ஐக்கிய மக்கள் சக்தியின் பொத்துவில் தொகுதி இணை அமைப்பாளராக உப தவிசாளர் வெள்ளையன் வினோகாந்த்!

November 24, 2025 10:42 am
ஐக்கிய மக்கள் சக்தியின் பொத்துவில் தொகுதி இணை அமைப்பாளராக உப தவிசாளர் வெள்ளையன் வினோகாந்த்!

ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட பொத்துவில் தொகுதி இணை அமைப்பாளருக்கான நியமனம் சம்மாந்துறை பிரதேச சபை உப தவிசாளர் வெள்ளையன் வினோகாந்த் மீண்டும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ அவர்களால் கொழும்பு கிரான் மோனாச் ஹோட்டலில் வைத்து நேற்று (23) உத்தியோபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது.





இதன்போது இலங்கையின் ஏனைய மாவட்டங்களுக்கான தொகுதி அமைப்பாளர்களுக்கான நியமனங்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.





இந்நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர், பொருளாளர், பாராளுமன்ற உறுப்பினர்கள், தொகுதி அமைப்பாளர்கள், கட்சியின் முக்கிய பிரமுகர்கள் என அதிகமானவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.





நியமனம் பெற்ற உப தவிசாளர் வெள்ளைய வினோகாந்த அவர்கள் கருத்து தெரிவிக்கையில் தான் தொடர்ச்சியாக இப்பொறுப்பில் அதிக வருடங்கள் செயல்பட்டு வருவதாகவும், மீண்டும் மீண்டும் அப்பொருப்பினை கட்சி தலைமை தன்னிடத்தில் ஒப்படைத்துள்ளதாகவும் எதிர்காலத்தில் தனது கட்சிக்கும் தனக்கு வாக்களித்த தொகுதி மக்களுக்கும் இன்னும் அதிகமான விசுவாசத்துடன் அர்ப்பணிப்புடன் பணியாற்ற உள்ளதாகவும் தெரிவித்தார்.





நூருல் ஹுதா உமர்






https://youtu.be/jWaYBc5BD8Y?si=27weeiz9dkL8ukXo

Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now